* நல்ல முறையில் பழகத்தெரிந்தவர், நல்ல குணம் உள்ளவர்களே நண்பர்களில் சிறந்தவர். * வியாபாரத்தில் உண்மை சொன்னால் வளர்ச்சி ஏற்படும். * குழந்தைகளிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். * பெரியவர்களுக்கு மரியாதை கொடுங்கள். * நோன்பு ஒரு கேடயம். அதைக்கொண்டு நம்மை தற்காத்துக் கொள்ள முடியும். * மனசாட்சியை உறுத்தும் செயலை செய்யாதீர்கள். * உங்களை நீங்களே பெருமைபடுத்திக் கொள்ளாதீர்கள். * ஆசைகள், தேவைகளை குறைத்துக் கொள்பவர்களே சுதந்திரமானவர்கள். * மது அருந்துவது பாவங்கள் அனைத்திற்கும் தாயாகும். – பொன்மொழிகள்