பதிவு செய்த நாள்
06
அக்
2021
04:10
திருச்சி: திருச்சியில், காவிரி ஆற்றின் படித்துறைகளில், பொது மக்கள் கூடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் அறிவுரைப்படி, திருச்சி மாவட்டத்தில், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், மகாளய அமாவாசை தினமான இன்று, சமூகப் பரவலைத் தடுக்கும் வகையில், திருச்சி, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில், பொது மக்கள் கூடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், காவிரி ஆற்றின் கரையில் உள்ள அனைத்து படித்துறைகளிலும், மக்கள் அதிகளவில் கூடுவதையும், திதி கொடுத்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.