பதிவு செய்த நாள்
06
அக்
2021
04:10
ஈரோடு: மகாளய அமாவாசை தினமான இன்று, கோவில்கள், நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய, அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடுவர். கொரோனா பரவலால் வழிபாட்டு தலங்கள், அணைக்கட்டு, ஆறுகளில் புனித நீராட, ஈரோடு மாவட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பண்ணாரி அம்மன் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி, ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் மற்றும் படித்துறை, பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், திண்டல் வேலாயுதசுவாமி கோவில், ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், தங்கமேடு தம்பிகலை ஐயன்கோவில், மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவில், அந்தியூர் செல்லீஸ்வரர் கோவில். கோபி சாரதா மாரியம்மன் கோவில், ஈரோடு கள்ளுக்கடைமேடு பத்ரகாளியம்மன் கோவில், சூரம்பட்டிவலசு மாரியம்மன் கோவில், காஞ்சிகோவில் சீதேவியம்மன் கோவில், கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன் கோவில், பெருந்துறை செல்லாண்டியம்மன் கோவில்களில் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. தலையநல்லூர் பொன்காளியம்மன் கோவில், சத்தி வேணுகோபாலசுவாமி கோவில், காங்கேயம்பாளையம் நட்டாட்டீஸ்வரர் கோவில், நஞ்சை காளமங்கலம் மத்யபுரீஸ்வரர் கல்யாண வரதராஜ பெருமாள் கோவில்களிலும், வழிபட முடியாது. இதேபோல் காரணம்பாளையம் அணைக்கட்டு, கொடிவேரி அணைக்கட்டு, பவானிசாகர் அணை போன்ற இடங்களில் அனுமதி இல்லை. இத்தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.