திருப்புவனம் : திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் மறைந்த முன்னோர்களுக்கு இந்துக்கள் திதி, தர்ப்பணம் கொடுத்து புஷ்பவனேஸ்வரரை வணங்கி செல்வது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக அரசு தடை விதித்திருந்தாலும் புரோகிதர்கள் இன்றிபக்தர்களே வைகை ஆற்றில் திதி, தர்ப்பணம் கொடுத்து புஷ்பவனேஸ்வரரை வழிபட்டு சென்றனர். மழை காரணமாக வைகை ஆற்று பள்ளங்களில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில் பக்தர்கள் முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து சென்று வைகைஆற்றில் தர்ப்பணம் கொடுத்தனர்.