விருதுநகர் கோயில்களில் மகாளய அமாவாசை; சமூகஇடைவெளியுடன் பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07அக் 2021 05:10
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட கோயில்களில் மகாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை பிரசித்தி பெற்றது. இந்நாளில் பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வர். நேற்று மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் மகாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயில், அருப்புக்கோட்டை சொக்கநாதர் கோயில், சாத்துார் காசி விஸ்வநாதர் கோயில், திருச்சுழி திருமேனி நாதர் கோயில், ராஜபாளையம் மாயூரநாதசுவாமி கோயில், நச்சாடை தவிர்த்த சுவாமி, சொக்கர் கோயில், வத்திராயிருப்பு மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில், சிவகாசி சுப்பிரமணிய சுவாமி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி ஆறு, குளங்கள், கோயில்களில்முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.