பதிவு செய்த நாள்
09
அக்
2021
02:10
பெங்களூரு: தசராவையொட்டி, பயணியர் வசதிக்காக, வரும் 13 முதல் 21 வரை கே.எஸ்.ஆர்.டி.சி., கூடுதலாக 1,000 பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளது.கே.எஸ்.ஆர்.டி.சி., வெளியிட்ட அறிக்கை:பெங்களூரிலிருந்து, கர்நாடகாவின் பல்வேறு இடங்கள், வெளி மாநிலங்களுக்கு, கூடுதலாக 1,000 பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் வரும் 13 முதல் 21 வரை இயங்கும்.பெங்களூரிலிருந்து, ஷிவமொகா, குக்கே சுப்ரமண்யா, தர்மஸ்தலா, மங்களூரு, குந்தாபுரா, சிருங்கேரி, ஹொரநாடு, மைசூரு, மடிகேரி, ஹூப்பள்ளி.தார்வாட், பெலகாவி, கார்வார், ராய்ச்சூர், கலபுரகி, கொப்பால், பீதர், யாத்கிர், விஜயவாடா, திருப்பதி, ஹைதராபாத், கோட்டயம், சென்னை, கோயமுத்துார்.திருவனந்தபுரம், பூனா, பனாஜி உட்பட பல்வேறு இடங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயங்கும்.தசராவையொட்டி கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டாலும் பயண கட்டணம் அதிகரிக்கப்படாது. கே.எஸ்.ஆர்.டி.சி., இணைய தளம் மற்றும் புக்கிங் கவுன்டர்களில் டிக்கெட் முன் பதிவு செய்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.