காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் வஜ்ராங்கி சேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09அக் 2021 03:10
காரைக்கால் : நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி 4வது சனிக்கிழமையை முன்னிட்டு வஜ்ராங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
காரைக்கால் பாரதியார்சாலையில் உள்ள நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதத்தையொட்டிஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடக்கும். அதன்படி புரட்டாசி 4வது சனிக்கிழமையொட்டி மூலவர் ரங்கநாதர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது. பின் மூலவர் மற்றும் உற்சவர் நித்ய கல்யாண பெருமாள் ஸ்ரீதேவி.பூதேவியுடன் வஜ்ராங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழுவினர் மற்றும் நித்ய கல்யாண பக்தஜனசபாவினர் சிறப்பாக செய்திருந்தனர். இதுப்போல் காரைக்காலில் பல்வேறு முக்கிய பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.