சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி 91ம் ஆண்டு குருபூசை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11அக் 2021 03:10
கட்டிக்குளம்: மதுரையிலிருந்து மானாமதுரை செல்லும் வழியில் இருக்கும் திருப்பாச்சேத்தியிலிருந்து தெற்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கட்டிக்குளம். காளயுக்தி வருடம் ஆடி மாதம் பூராட நட்சத்திரத்தில் (1855 ஜூலையில்) மாயாண்டி சுவாமிகள் அவதரித்தார். திருக்கூடல் மலை என்ற காகபுஜண்டர் மலையில் காகபுஜண்டர் இன்றும் அரூபமாக யோக சமாதியில் இருக்கின்றார் என்றும் அங்கு பல சித்தர்கள் அரூபமாக வாழ்ந்துவருவதாகவும் கூறப்படுகிறது . இப்படிப்பட்ட புனிதமான அந்த மலையின் அடிவாரத்தில் மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது. சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் 91ம் ஆண்டு குருபூசை விழா இன்று புரட்டாசி 25, அக்டோபர் 11ல் நடைபெற்றது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.