பதிவு செய்த நாள்
11
அக்
2021
05:10
எழுமலை: எழுமலை அருகே கைகளில் வளரி, வேல், இடுப்பில் குறுவாளுடன் நடுகல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
எழுமலை இ.கோட்டைப்பட்டியில் உள்ள சுமார் 500 ஆண்டுகள் பழமையான நடுகல் 3 அடி உயரம், 3 அடி அகலம் கொண்ட கல் பாதி உருண்டை வடிவில் செதுக்கப்பட்டுள்ளது. முன்பகுதியில் புடைப்புச் சிற்பமாக தலைவனும், தலைவியும் உள்ளனர். வலது கையில் வேலும், இடது கையில் வளரியும், இடுப்பில் குறுவாளுடன் ஆபரணங்கள் அணிந்து தலைவனும், கும்பிட்ட நிலையில் தலைவியின் சிற்பமும் உள்ளது. காந்திராஜன், தொல்லியல் ஆய்வாளர்: வளரி, வேல் தொன்மையான ஆயுதங்கள். ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் காணப்படும் பழமையான வளரி தமிழகத்தில் மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை பகுதிகளில் காணப்படுகின்றன. 1800 காலகட்டத்தில் வளரியை யாரும் பயன்படுத்தக்கூடாது என தடைசெய்கின்றனர். மதுரைக்கு மேற்கே பழமையான வளரியுடன் கூடிய சிற்பங்கள் கிடைக்கிறது. கருமாத்தூர் கோவிலாங்குளம் கிராமத்தில் உள்ள பட்டவன் சாமி கோயிலில் தற்போதும் வளரி ஆயுதத்தை நேர்த்திக்கடனாக செலுத்தும் வழக்கம் இருந்து வருகிறது என்றார்.