சுயம்வரத்தில் பங்கேற்கும் நிடதநாட்டு மன்னர் நளனுக்கு தனக்கு மாலையிட விரும்பினாள் தமயந்தி. ஆனால் அழகியான அவளை அடைய விரும்பிய இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், நளன் போல உருமாறி சுயம்வரத்தில் பங்கேற்றனர். எங்கும் நளனாக இருப்பது கண்ட தமயந்தி திகைத்தாள். உண்மையான நளனை அறிய முடியாமல் அவள் தவித்த போது சரஸ்வதி ‘வானுலகில் வாழும் தேவர்களின் கால்கள் தரையில் படாது’ என்ற உண்மையை உணர்த்தி வழிகாட்டினாள். மனிதனான நளனின் கால்கள் மட்டும் தரையில் படுவதைக் கண்டு சரியான நபருக்கு மாலையிட்டு மகிழ்ந்தாள் தமயந்தி.