ராமசாமி கோவிலில் பக்தர்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16அக் 2021 11:10
பொங்கலூர்: ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமை களில் பொங்கலூர் கோவில் பாளையம் ராமசாமி கோவில் சுவாமி தரிசனம் செய்ய பல்லாயிரம் பக்தர்கள் வருகை தருவர். இந்தாண்டு கொரோனா காரணமாக போடப்பட்ட ஊரடங்கு உத்தரவால் புரட்டாசி மாத சிறப்பு வழிபாடு தடை செய்யப்பட்டிருந்தது. இதனால், பக்தர்கள் ஏமாற்றத்தில் இருந்தனர்.
தற்போது தடைகளை விலக்கிக் கொள்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இன்று புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை ஆகும். இன்று பக்தர்களின் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கோவில் வளாகத்தில் பக்தர்கள் ஒவ்வொருவராக நெரிசலில் சிக்காமல் சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக சவுக்கு கம்புகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பக்தர்களின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.