பிள்ளையார்பட்டியில் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16அக் 2021 11:10
பிள்ளையார்பட்டி: பிள்ளையார்பட்டியில் வாரத்தில் மூன்று நாட்கள் கோயிலுக்குள் செல்ல இருந்த கொரானா ஊரடங்கு தடை விலக்கப்பட்டப்பின் நேற்று பக்தர்கள் ஆர்வமாக வந்து மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
கொரோனா கட்டுப்பாடு ஊரடங்கால் கோயில்களில் வெள்ளி,சனி,ஞாயிறுகிழமைகளில் பக்தர்கள் வழிப்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பிள்ளையார்பட்டிக்கு பக்தர்கள் வருகை இல்லை. சிலர் மட்டும் வந்து கோயில் வாசலில் நின்று வணங்கி சென்றனர். இதனால் கடைவீதிகள் வெறிச்சோடி போனது. சில கடைகள் மட்டும் திறந்திருந்தது. தடை விலக்கப்பட்டது அறிந்தவுடன் பிள்ளையார்பட்டியில் வாகனங்களில் பக்தர்கள் வருகை நேற்று அதிகாலை முதல் துவங்கியது. கோயிலினுள் சென்று மகிழ்ச்சியுடன் தங்கக் கவசத்தில் அருள்பாலித்த மூலவரை தரிசித்து சென்றனர். தேவகோட்டை பக்தர் செல்வக்குமார் கூறுகையில், கோயில்கள் 3 நாட்கள் மூடியிருந்தது கவலையாக இருந்தது,. வெள்ளி மற்றும் விசேஷ நாட்களில் பிள்ளையார்பட்டி சாமி தரிசனம் செய்வது என் வழக்கம். இதனால் மூலவரை தரிசனம் செய்ய முடியவில்லை. டாஸ்மாக் எல்லாம் திருக்கும் போது, கோயில்கள் மூடப்பட்டிருந்து. இருந்தாலும் பல முறை பிள்ளையார்பட்டி வந்து வெளியில் நின்று விநாயகரை வணங்கி சென்றேன். எதிர்பாராமல் நேற்று தடை விலக்கப்பட்டது. உடனடியாக பிள்ளையார்பட்டி வந்து விநாயகரை வணங்கியது மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகிறது.’ என்றார். பக்தர்கள் வருகையை அடுத்து பெரும்பாலான கடைகளும் திறக்கப்பட்டிருந்தது.