பதிவு செய்த நாள்
16
அக்
2021
04:10
அவிநாசி: விஜயதசமியை முன்னிட்டு, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், பலரும் வழிபாடு நடத்தினர். வார இறுதி நாட்களில், வழிபாட்டு தலங்களில் வழிபாடு நடத்த விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்ட நிலையில், நேற்று முதல் கோவில், தேவாலயம், மசூதிகளில் வழக்கம் போல் வழிபாடுகள் நடத்தப்பட்டன. கொரோனா தொற்றுப்பரவல் பாதுகாப்பு நடவடிக்கையாக வழிபாட்டு தலங்களில், 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், அவர்களும் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல துவங்கினர். அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று, பலரும் வழக்கம் போல் வந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.