பதிவு செய்த நாள்
16
அக்
2021
04:10
வால்பாறை: வால்பாறையில் உள்ள கோவில்களில் குழந்தைகளின் நாவில் அகரம் எழுதி, விஜயதசமி கொண்டாடப்பட்டது.விஜயதசமி நாளில், சரஸ்வதி தேவியை கொண்டாடும் விதமாக, குழந்தைகளின் நாவில் அகரம் எழுதி, குழந்தைகளின் கையால் நெல்மணியிலும் அகரம் எழுதும் வித்யாரம்பம் நடக்கிறது. அதே நாளில் குழந்தைகளுக்கு அரிச்சுவடி ஆரம்பமும் நடக்கிறது.வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், நேற்று நடந்த நிகழ்ச்சியில் கோவில் தலைமை அர்ச்சகர் கண்ணன், குழந்தைகள் நாவில் அகரம் எழுதினார். மற்ற கோவில்களில், குழந்தைகளுக்காக சிறப்பு பூஜைகளும் நடந்தன. வால்பாறை நகர் மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.* பொள்ளாச்சி அடுத்த, ஆனைமலை ஆர்ஷ வித்யாபீடத்தில், இன்று (15ம் தேதி), காலை, 11:00 மணிக்கு, வித்யாரம்ப பெருவிழா நடக்கிறது. மாண்டுக்ய உபநிஷத் வகுப்பின் வித்யாரம்பம் துவங்குகிறது. இந்நிகழ்வில், பெற்றோர் குழந்தைகளுடன் பங்கேற்கலாம். இதற்கான, ஏற்பாடுகளை ஆர்ஷ வித்யாபீடத்தினர் செய்து வருகின்றனர்.