பதிவு செய்த நாள்
19
அக்
2021
05:10
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் ஐப்பசி மாதப்பிறப்பு, பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
திண்டுக்கல் வெள்ளை விநாயகர், 108 விநாயகர், ரயிலடி சித்தி விநாயகர், ரவுண்ட் ரோடு கற்பக விநாயகர், கூட்டுறவு நகர் செல்வ விநாயகர், கோட்டை மாரியம்மன், அபிராமியம்மன் கோயில்களில் ஐப்பசி மாதப்பிறப்பு, பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பழநிமுருகன் கோயிலில் ஆனந்த விநாயகருக்கு கணபதி ேஹாமத்துடன் யாக பூஜை நடந்தது. விநாயகருக்கு கலச நீரில் அபிேஷகம், வெள்ளிக்கவச அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பெரியாயுடையார், திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன், லட்சுமி பெருமாள் கோயில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயிலில் சோம பிரதோஷ விழாவை முன்னிட்டு மூலவர், ஓம்கார நந்திக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்துடன், மகா தீபாராதனை, அன்னதானம் நடந்தது. இதே போல், தர்மத்துப்பட்டி மல்லேஸ்வரர், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி, காரமடை ராமலிங்க சுவாமி, சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் சிறப்பு அபிேஷகம், ஆராதனைகள் நடந்தது.