கொண்டையம்பட்டி மந்தையம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜன 2026 12:01
நத்தம்; நத்தம்-கொண்டையம்பட்டி மந்தையம்மன் கோவிலில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகங்களும், தீபாராதனைகளும், பூஜைகளும் நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும் திருவிளக்கு பூஜை நடந்தது.இதில் சுற்று வட்டாரங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கொண்டையம்பட்டி ஊர் பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.