சாலையூர் பழனி ஆண்டவர் கோவிலில் தைப்பூச விழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜன 2026 12:01
அன்னூர்; சாலையூர் பழனி ஆண்டவர் கோயில் தைப்பூச திருவிழாவில் கொடியேற்றம் நடந்தது.
பல நூறு ஆண்டுகள் பழமையான வாரணாபுரம் என்று அழைக்கப்படும் சாலையூர் பழனி ஆண்டவர் கோயிலில் நேற்றுமுன்தினம் அதிகாலை வேள்வி பூஜை நடந்தது. காலை 7:40 மணிக்கு தைப்பூச கொடியேற்றப்பட்டது. பழனி ஆண்டவருக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. பழனி ஆண்டவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். நாளை (29ம் தேதி) திருக்குட நன்னீராட்டு மூன்றாம் ஆண்டு விழா நடைபெறுகிறது. காலை 9:00 மணிக்கு வேள்வி வழிபாடும், மகா அபிஷேகமும், மதியம் 12:30 மணிக்கு அலங்கார பூஜையும், பேரொளி வழிபாடும் நடக்கிறது. பா.ஜ., மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். வரும் பிப். 1ம் தேதி தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை 5:00 மணிக்கு விநாயகர் வழிபாடு, 6:00 மணிக்கு வேல் வழிபாடு, காலை 8:00 மணிக்கு மூலவருக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடக்கிறது. காலை 10:00 மணிக்கு உற்சவருக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடைபெறுகிறது. கோவில் வளாகத்தில் காவடி சமர்ப்பிக்கப்படுகிறது.