* இரவு 9:00 மணி – நள்ளிரவு 3:00 மணி வரை நதிகளில் நீராடக் கூடாது. சூரிய, சந்திர கிரகண காலத்திற்கு இந்த விதி பொருந்தாது. * அமாவாசையன்று வீட்டில் சமைத்தே சாப்பிட வேண்டும். வெளியிடங்களில் சாப்பிடக் கூடாது. அன்று அன்னதானம் செய்வது சிறப்பு. * பிரயாணத்தின் போது காயத்ரி மந்திரம் ஜபிப்பது கூடாது. துாய்மையுடன் கோயில், வீட்டு பூஜையறையில் மட்டுமே ஜபிக்க வேண்டும். * தீபாராதனையின் போது சுவாமியின் திருவடிக்கு நான்கு முறையும், முகத்திற்கு ஒரு முறையும் கற்பூரம் காட்டிய பின்னரே முழு உருவத்துக்கு மூன்று தடவை காண்பிக்க வேண்டும். * பெண்கள் வீட்டில் கோலம் இடாமலும், விளக்கேற்றாமலும் கோயிலுக்கு செல்வது கூடாது. * எரியும் விளக்கில் எண்ணெய்யைக் கையால் தொடுவதும், அதை தலையில் தடவிக் கொள்வதும் கூடாது. * சிவனுக்கு வில்வம், விஷ்ணுவுக்கு துளசி, விநாயகருக்கு அருகம்புல், பிரம்மாவுக்கு அத்தி இலை சிறப்பானவை. இதை மாற்றி மற்றவருக்கு வைத்து வழிபடுவது கூடாது. * பெண்கள் வேல், சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது கூடாது. * கோயில்களில் சூடம், தீபத்தை கைகளில் ஏற்றி சுவாமிக்கு காட்டுவது கூடாது. * நைவேத்யமாக படைத்த தேங்காயை சமையலில் சேர்த்து மீண்டும் அந்த உணவை சுவாமிக்கு படைப்பது கூடாது.