கர்நாடக மாநிலம் மங்களூரு அருகிலுள்ள குகே கிராமத்தில் முருகன் கோயில் உள்ளது. இங்குள்ள முருகனை ‘குக்கே சுப்பிரமணியா’ என்பர். ‘குக்கே’ என்றால் சேவல். ‘கொக்கரக்கோ’ என்பதே ‘குக்கே’ என வழங்கப்படுகிறது. டிசம்பர் மாதத்தில் இங்கு நடக்கும் தேர்த்திருவிழா (மகா ரதோத்ஸவம்) சிறப்பானது. தேரை இழுக்க கயிறு வடமோ, இரும்புச்சங்கிலியோ கிடையாது. காட்டில் கிடைக்கும் பிரம்புகளை ஒன்றோடொன்று இணைத்துக் கட்டி இழுக்கின்றனர். விழா முடிந்ததும் பிரம்புகளை வீட்டுக்கு கொண்டு செல்கின்றனர். இதைக் கல்லில் உரைத்து விஷக்கடிக்கு இட்டால் குணமாகும் என்கின்றனர்.