Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் ... குன்றத்து கோயிலுக்கு வெள்ளி பல்லக்கு உபயம் குன்றத்து கோயிலுக்கு வெள்ளி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளைக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
எழுத்தின் அளவு:
ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளைக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

பதிவு செய்த நாள்

02 நவ
2021
02:11

 அமராவதி : ஆந்திர அரசு, புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் சிறப்பான பொதுநல சேவையை பாராட்டும் வகையில், ஒய்.எஸ்.ஆர்., வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்து உள்ளது.

ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஜெகனின் தந்தையும், மறைந்த முன்னாள் முதல்வருமான ராஜசேகர ரெட்டியின் நினைவாக பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்படுவோருக்கு ஒய்.எஸ்.ஆர்., வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் நேற்று ஆந்திரா உருவான தினத்தையொட்டி விஜயவாடாவில், ஒய்.எஸ்.ஆர்., வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா நடந்தது. இதில் ஆந்திர கவர்னர் பிஸ்வபூஷன் ஹரிசந்திரன், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் பங்கேற்று, வாழ்நாள் சாதனையாளர் விருது, சாதனையாளர் விருது ஆகியவற்றை வழங்கி சிறப்பித்தனர். இவ்விழாவில் ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை சார்பில், அதன் நிர்வாகி ஆர்.ஜே.ரத்னாகர் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றுக் கொண்டார். ஸ்ரீ சித்தேந்திர யோகி கலாஷேத்ரம் உள்ளிட்ட 11 நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன. வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தேர்வான பிரபலங்களுக்கு தலா, 10 லட்சம் ரூபாய் மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இதேபோல சமூகத்திற்கு சிறந்த வகையில் தொண்டு புரிந்த ஏழு நிறுவனங்கள் மற்றும் 25 தனி நபர்களுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டன. இதில் தலா, 5 லட்சம் ரூபாயுடன் நினைவுப் பரிசு தரப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கோவை ஈஷா யோகா மையத்தில், ஆதியோகி திவ்ய தரிசன நிகழ்வு, பராமரிப்பு பணிகளுக்காக, 5 ... மேலும்
 
temple news
சென்னை; ‘‘கோவில்களால் கலைகள் வளர்க்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு உள்ளன,’’ என, செம்மொழி தமிழாய்வு மத்திய ... மேலும்
 
temple news
 வயாலி காவல்,; திருப்பதி ஏழுமலையான் கோவில் போன்று, பெங்களூரு வயாலி காவலில் உள்ள திருமலை திருப்பதி ... மேலும்
 
temple news
திருக்குறுங்குடி; திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் 9 நாட்கள் நடந்து வந்த பவித்ர உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar