இந்தியாவின் சில பகுதிகளில் பெண்கள் புரோகிதராகப் பணியாற்றுவது சரிதானா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூன் 2012 02:06
வழிபாட்டுப் பழக்கவழக்கங்கள் தட்சிணாசாரம், வாமாசாரம் என்று இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தட்சிணாசாரம் என்பது தென்னிந்திய வழிபாட்டு முறை. வாமாசாரம் என்பது வடஇந்திய வழிபாட்டுமுறை. சைவ, வைணவ சமயங்கள் பெரிதும் வளர்ந்து நிற்கும் தென்னிந்திய வழிபாட்டு முறைகளில் பெண்கள் புரோகிதராகக் கூறப்படவில்லை. வாமாசார முறைகளில் ஏற்றுக் கொள்ளப்படுவதுண்டு. சரியா தவறா என்று கூறும் நிலையில் நாடு இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக தேசாசாரம் (நாட்டு வழக்கம்) தலைதூக்கி நிற்கிறது. ஊரோடு ஒத்துப்போக வேண்டிய நிர்ப்பந்த நிலை இருக்கிறது. அதை நினைத்தால் தலை சுற்றுகிறது.