சிறுமுகை விருட்ச பீடம் கோயிலில் மகாலட்சுமி குபேர பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04நவ 2021 06:11
மேட்டுப்பாளையம்: சிறுமுகை அடுத்த கிச்சகத்தியூரில் விருட்ச பீடம் உள்ளது. இங்கு இன்று மகா லட்சுமி குபேர பூஜை நடைபெறுகிறது. காலை, 5:50 மணிக்கு கோ பூஜையும், 6:30 மணிக்கு விக்னேஸ்வர வழிபாடும், 27 நட்சத்திர விருட்சங்கள், அதிதேவதைகள், சித்தர்கள், நவகிரகம், பஞ்ச லிங்கம், பாதாள லிங்கத்துக்கு வழிபாடு செய்யப்பட உள்ளது. 7:00 மணிக்கு மகாலட்சுமி குபேர பூஜையும், யாகமும் நடைபெற உள்ளது. அதையடுத்து பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்படுகிறது. குபேர பூஜைக்கான ஏற்பாடுகளை லட்சுமி தாச சுவாமி வருகிறார்.