முருகனுக்கு பல தலங்கள் இருந்தாலும் ஆறு தலங்களை மட்டும் படை வீடுகள் என அழைப்பர். போர் புரியச் செல்லும் தளபதி, தனது படைகளுடன் தங்கியிருக்கும் இடம் படைவீடு. சூரபத்மனை வதம் செய்யச் சென்ற முருகன், படைகளுடன் தங்கிஇருந்த தலம் திருச்செந்துார். ஆனால், மற்ற ஐந்து தலங்களையும் சேர்த்து, ஆறுபடை வீடு என்கிறோம். வறுமையில் வாடும் புலவர் ஒருவரிடம், அதில் இருந்து மீண்ட புலவர், வள்ளல் இருக்குமிடத்தை சொல்வதாக அமைந்த பாடல்கள் ஆற்றுப்படை எனப்படும். இந்த வகையில் வள்ளல் முருகனிடம் சென்றால் குறை தீரும் என்னும் அடிப்படையில் அமைந்தது திருமுருகாற்றுப்படை. இதில் ஆற்றுப்படை வீடுகள் என ஆறு கோயில்கள் உள்ளன. அவையே ஆறுபடை வீடுகள் என அழைக்கப்படுகின்றன.