சிவனின் இளைய மகனான முருகனை குமரன் (இளைஞன்) என்று சொல்லி தான் கேள்விப்பட்டிருக்கிறோம். முருகனுக்கு குறிஞ்சிக்கிழவன் தமிழ்க்கிழவன் என்றும் பெயருண்டு. கிழவன் என்றால் உரிமை கொண்டவன் அல்லது தலைவன் என பொருள். தமிழ் மொழிக்கு உரியவன் என்பதால் தமிழ்க் கிழவன் என்றும், மலைக்கு உரிய தெய்வமாக விளங்குவதால் குறிஞ்சிக்கிழவன் என்றும் அழைக்கப்படுகிறார்.