சஷ்டி விரதமிருக்கும் முறை குறித்து வாரியார் விளக்குகிறார். கந்தசஷ்டி விரதத்தின் ஆறுநாளும் தினமும் அதிகாலை எழுந்து ஆறுகளில் தண்ணீரின் போக்கிற்கு எதிராக நின்று கொண்டு, முருகனை மனதில் நினைத்து தண்ணீரில் சரவணபவ என எழுதி, குறுக்காக மேலும் கீழுமாக ஓம் என எழுத வேண்டும். பிறகு எதிராக நின்றபடியே நீர்நிலையை சிவகங்கையாக பாவித்து மூழ்கி எழ வேண்டும். கிணறு, குளத்தில் குளிப்பவர்கள் வடக்கு நோக்கி நின்று இதே முறையில் மந்திரம் எழுதி குளிக்க வேண்டும். ஆறுநாளும் உபவாசம் (உணவைத் தவிர்த்து) இருந்து கந்தசஷ்டி கவசம், கந்த புராணம், திருப்புகழ், திருமுருகாற்றுப்படை ஆகியவற்றை பொருள் உணர்ந்து படிக்க வேண்டும். திருச்செந்துõர், திருப்பரங்குன்றம் ஆகிய தலங்களில் தங்கி விரதம் இருப்பது சிறந்தது. கந்தசஷ்டியன்று சூரசம்ஹாரம் தரிசிக்க வேண்டும். அன்று இரவில் துõங்கக்கூடாது. சஷ்டிக்கு மறுநாள் பகலிலும் கண்விழிக்க வேண்டும். கூட்டாக விரதமிருப்பது இன்னும் சிறந்தது. உணவைத் தவிர்க்க முடியாதவர்கள் பழங்கள் சாப்பிடலாம். உணவு அவசியம் தேவைப்படுபவர்கள் சஷ்டி அன்று மட்டும் விரதம் இருக்கலாம். சூரசம்ஹாரம் முடிந்த பின் குளித்து விட்டு, இரவில் பச்சரிசி சாதம் சாப்பிடலாம்.