கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
வெள்ளிக்கிழமை ராகுகாலம்(காலை 10.30-12)பைரவருக்கு வெண்தாமரை மலர் மாலை அணிவித்து, வெண்பூசணி சாம்பார் சாதம், அதிரசம் படையலிட்டு வழிபட்டால் அர்த்தாஷ்டம சனிதோஷம் நீங்கும். திங்கட்கிழமை ராகுகாலம் (காலை 7.30- 9) மல்லிகை மலர் மாலை அணிவித்து, பாகற்காய் கலந்த அன்னம் படைத்தால் கண்டச்சனி தொல்லை நீங்கும். சனிக்கிழமை இரவு 7.30- 9க்குள் பைரவருக்கு கறுப்புப்பட்டு அணிவித்து வடைமாலை சாத்தி, கறிவேப்பிலை சாதம் படைத்து, இரும்பு அகலில் நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட அஷ்டமத்துச்சனியால் (எட்டாம் இட சனி) வரும் கெடுதல் நீங்கும். இதே நாளில், ராகுவேளையில் (காலை 9-10.30) வெற்றிலைமாலை அணிவித்து கறிவேப்பிலை சாதம், பாகற்காய் கூட்டு, பால்பாயாசம் படையலிட்டு வழிபாடு செய்ய ஏழரைச் சனியால் வரும் துன்பம்அகலும்.