சில குழந்தைகள் எதுவும் செய்யாமல் டல்லாக முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டிருக்கும். இவ்வாறு மந்தநிலையிலுள்ள குழந்தைகளை சுவாமிமலைக்கு அழைத்து வரலாம். ஓம் என்ற பிரணவ (என்றும் புதியது) மந்திரத்துக்கு அர்த்தம் தெரியாத பிரம்மாவின் தலையில் குட்டி, “அட அசடே! இது கூட தெரியாமல் நீ எப்படி படைக்கும் தொழிலைச் செய்கிறாய்?” என்று அவரது பணியைத் தன் கையில் எடுத்துக் கொண்டவர் முருகன். அது மட்டுமா! தன் தந்தைக்கும் அந்த மந்திரத்தின் பொருள் தெரியாமல் போக, அவரையும் மண்டியிட வைத்து உபதேசித்தவர். குழந்தைகள் பெற்றவர்களின் முதுகின் மீது ஏறி அமர்ந்து யானை செல்வது போல பாவனை செய்யச் சொன்னால், எப்படி மகிழ்ச்சி கிடைக்குமோ அந்த மகிழ்ச்சியை சிவன் அடைந்தார். அப்பனுக்கு பாடம் சொன்ன இந்த சுப்பையாவை வழிபட்டால் குழந்தைகள் படிப்பில் சுட்டிகளாகத் திகழ்வார்.