பதிவு செய்த நாள்
09
நவ
2021
11:11
சென்னை : சென்னை வண்டலூர் அருகிலுள்ள ரத்னமங்கலம் அரைக்காசு அம்மன் பீடத்தின், அஷ்டபந்தன கும்பாபிஷேகம் வரும் 15ம் தேதி நடக்கிறது. இக்கோவிலில், மதுரை மீனாட்சி, திருநெல்வேலி காந்திமதி, சங்கரன்கோவில் கோமதி, கோல்கட்டா காளி, மலேசியா மகாகாளி, ஆற்றுக்கால் பகவதி, திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உள்ளிட்ட 108 அம்பாள் விக்ரகங்கள், நுழைவாயில் விநாயகர், 18ம்படி கருப்பர், ஹயக்ரீவ சரஸ்வதி, சுயம்வர பார்வதி, லட்சுமி நாராயணர், அரைக்காசு அம்மன், மகாமேருவுக்கு புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் தலைமை குருக்கள் கணேச சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பாக நடைபெற உள்ளது.
இதற்கான கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நவ 14ல் துவங்குகின்றன. முதல் நாள் காலை 6.00 க்கு அனுக்ஞை பூஜை, தொடர்ந்து கணபதிஹோமம், தனபூஜை, பூர்வாங்க பூஜைகளும் நடக்கின்றன. மாலை 6.05 மணிக்கு முதல் கால யாக பூஜை நடக்கிறது. 15ம் தேதி காலை 6.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், பூர்ணாஹுதியும் நடக்கிறது. காலை 9.00 மணி – 10.30 மணிக்குள் அரைக்காசு 108 அம்மன் மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. பகல் 12 மணிக்கு மகா அபிஷேகமும் மாலை 6 மணிக்கு அரைக் காசு அம்மன் உற்சவர் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.
அரைக்காசு 108 அம்மன் பீடத்தில் நடைபெறும் தினசரி அன்னதான திட்டத்திற்கு நன்கொடைகள் அளிக்க விரும்பும் பக்தர்கள் அரைக்காசு 108 அம்மன் டிரஸ்ட், சென்னை, போன்: 91760 06176 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.