தேவகோட்டை : தேவகோட்டை ஸ்ரீ ராமாயண ராமர் கோயிலில் பன்னிரு திருமுறை முற்றோதல் தொடக்க விழா கோயில் நிறுவுனர் அருசோமசுந்தரன் தலைமையில் நடந்தது. முற்றோதல் குழு தலைவர் பேராசிரியர் சுப்பையா வரவேற்றார். டாக்டர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். சிதம்பரம் , தேவநாவே, கார்மேகம் , பாலசுப்பிரமணியம் பேசினர். 27 புலவரை பாடியுள்ள 18 ஆயிரம் பாடல்கள் பற்றி தொகுப்புரை ஆற்றினார். சேவுகன் அண்ணாமலை நன்றி கூறினார். முன்னதாக ஸ்ரீ ராமர் , சீதை உட்பட பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடக்க விழா தொடர்ந்து 50 பேர் முற்றோதல் செய்தனர்.