கூடலுார் : கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பெண்கள் பால்குடம் எடுத்து நடுத்தெரு, காமாட்சியம்மன் கோயில் தெரு, மெயின்பஜாரில் ஊர்வலமாக வந்து கோயிலை அடைந்தனர். அங்கு சுந்தரவேலவருக்கு பால் அபிசேகம் செய்யப்பட்டது. மாலையில் சூரசம்காரம் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.