*சாத்துார் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட காசிவிஸ்வநாதர் உடனுறை காமாட்சியம்மன் கோவிலில் ஸ்ரீ முருகன். வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நேற்று காலை 11:00 மணிக்கு நடந்தது. அன்னதானம் நிகழ்ச்சியில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். மாலையில் சுவாமி திருக்கல்யாணத்தை தொடர்ந்து ஊர்வலம் நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக நடந்த ஊர்வலம் கோவிலை வந்தடைந்தது. விழா கமிட்டியார் பலர் கலந்து கொண்டனர்.
* சாத்துார் பிள்ளைமார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ சுப்பிரமணியசாமி கோவிலில் முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நிகழ்ச்சி நேற்று இரவு 8:00 மணிக்கு நடந்தது. க்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் பலர் கலந்து கொண்டனர்.
*வெம்பக்கோட்டை வாழை மர சுப்பிரமணியசுவாமி கோவிலில் நேற்று காலை 10:00 மணிக்கு சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. சுற்றுக்கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் பலர் விழாவில் கலந்து கொண்டனர் . பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா கமிட்டியார்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.