வில்லியனுார் : வில்லியனுாரில், கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழா நடந்தது.மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு நேற்று மாலை குருபகவான் பிரவேசித்தார்.
அதனையொட்டி, கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் மாலை 4:00 மணியளவில் சிறப்பு பூஜையுடன் குருப்பெயர்ச்சி விழா துவங்கியது.தொடர்ந்து சங்கல்பம், சிறப்பு அபிேஷகம், கலச அபிேஷகம், மாலை 6:21 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. சிவா எம்.எல்.ஏ., உட்பட பலர் தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி திருவரசன் தலைமையில், சிவனடியார்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர்.
திருக்காஞ்சி காமாட்சி மீனாட்சி உடனுறை கெங்கவராக நதீஸ்வரர் கோவிலில் நடந்த குருபெயர்ச்சி விழா மாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிேஷகத்துடன் துவங்கியது. மாலை 6:21 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. மேலும் 6வது வார கங்கா ஆரத்தி விழா நடந்தது.விழாவில் துணை சபாநாயகர் ராஜவேலு, முன்னாள் சேர்மன் பாலமுருகன், பா.ஜ., பிரமுகர் செந்தில்குமரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். வில்லியனுார் அனந்தம்மாள் சத்திரம் ஏகாம்பரநாத மகேசுவரர் கோவில், ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோவில் உள்ளிட்ட இடங்களில் குருபெயர்ச்சி விழா நடந்தது.