திருமங்கலம்-திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் உள்ள மங்கள தட்சிணாமூர்த்தி சன்னதியில் குருபெயர்ச்சி விழா நேற்று நடந்தது. மாலை 6:21 மணிக்கு மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியானதைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.