பதிவு செய்த நாள்
15
நவ
2021
03:11
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம், சிறுமுகையில் குரு பெயர்ச்சி யாக வேள்வி நடந்தது.
மகர ராசியில் இருந்து, கும்ப ராசிக்கு குரு பகவான் இடம் பெயர்ந்துள்ளார். இதையடுத்து மேட்டுப்பாளையம் சிவன்புரம் ஆசிரியர் காலனியில் உள்ள ராஜ அஷ்ட விமோசன மகாகணபதி கோவிலில், குருபெயர்ச்சி வேள்வி நடந்தது. கணபதி பூஜை, புண்ணியாக வசனம், கலச ஆவாஹனம், கணபதி லட்சுமி நாராயண ஹோமம் பூஜைகள் நடந்தன. இதை அடுத்து குருபகவானுக்கு உத்தியோக ஹோமம் செய்யப்பட்டது. பின்னர் நவகிரகம் தட்சிணாமூர்த்திக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அர்ச்சகர் லட்சுமிநாராயணன் பூஜைகளை செய்தார். சிறுமுகை கிச்சகத்தியூரில் ஸ்ரீ விருட்ச பீடம் உள்ளது. இங்கும் குருபெயர்ச்சி வேள்வி நடந்தது. காலையில் கோ பூஜையும், விக்னேஸ்வர பூஜையும் நடந்தது. அதன் பின்பு, 27 நட்சத்திர விருட்சங்கள், அதிதேவதைகள், சித்தர்கள், நவகிரக அதி தெய்வங்கள், பஞ்சலிங்கம், பாதாள லிங்கம், வழிபாடுகள் நடந்தன. பிறகு குரு பெயர்ச்சி யாக வேள்வி நடந்தது. பின்பு குரு பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.