பதிவு செய்த நாள்
15
நவ
2021
03:11
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், குருபெயர்ச்சி விழா நேற்று நடந்தது.பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி ேஹாம அபிேஷக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில் குருபெயர்ச்சியையொட்டி கணபதி பூஜை, நவக்கிரக ேஹாமம், அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, 1,008 சகஸ்ரநாம அர்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளி பின்பற்றி குருபகவானை வழிபாடு செய்தனர். திப்பம்பட்டி ஸ்ரீ மும்மூர்த்தி ஆண்டவர் ஸ்ரீ வாராஹி அம்மன் கோவிலில், குருபகவானுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.வால்பாறைகுருபகவான் ஆண்டுக்கு ஒரு முறையும், சனி பகவான் இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறையும், ராகு, கேது ஒன்றரை ஆண்டுக்கு ஒரு முறையும், ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வர். இந்த ஆண்டு நவகிரகங்களின் குருபகவான் மகர ராசியிலிருந்து, கும்பராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார்.இதனையடுத்து, வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று குருபெயர்ச்சி யாகம் நடந்தது. குருபகவானுக்கு, சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. சிறப்பு யாக பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.உடுமலைஉடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், குருபெயர்ச்சியையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தது. குரு பகவானுக்கு, சிறப்பு ேஹாமம், சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது. மஞ்சள் வஸ்திரம், கொண்டைக்கடலை, முல்லைப்பூ, நல்லெண்ணெய், தேங்காய், பழம் ஆகிய பரிகார பொருட்களை சமர்ப்பித்து, பக்தர்கள் சிறப்பு பூஜையில் பங்கேற்றனர்.