கடலுார் : கடலுார் பகுதி கோவில்களில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை நடந்தது. குரு பகவான் மகர ராசியில் இருந்து கும்பம் ராசிக்கு இடம் பெயர்ந்தார்.
கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் நேற்று மாலை பாடலீஸ்வரர், பெரிய நாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.வில்வ நகர் வில்வநாதீஸ்வரரர் கோவில், புதுப்பாளையம் இரட்டை பிள்ளையார்கோவில் உட்பட பல கோவில்களிலும் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை நடந்தது. நெல்லிக்குப்பம் நெல்லிக்குப்பம் கைலாசநாதர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தட்சிணாமூர்த்தி சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். பூஜைகளை பாக்யராஜ் பூசாரி செய்தார். வரசித்தி விநாயகர், பூலோகநாதர், எய்தனுார் ஆதிபுரீஸ்வரர், திருக்கண்டேஸ்வரம் விருத்தகிரீஸ்வரர் கோவில்களிலும் குரு பெயர்ச்சி பூஜைகள் நடந்தது. புவனகிரிபுவனகிரி வெள்ளியம்பலம் கோவிலில் தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு ேஹாமம், மகா அபிேஷகம், மகா தீபாராதனை நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் ரத்தினசுப்பிரமணியன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.