நிலக்கோட்டை : மல்லியம்பட்டியில் காளியம்மன், பகவதி அம்மன் கோயில் திருவிழா நடத்த அனுமதி வழங்கப்பட்டது.கடந்த காலங்களில் திருவிழாவின்போது சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து கோர்ட் விசாரணையில் உள்ளது.
இந்த ஆண்டு திருவிழா நடத்த கிராமத்தினர் முடிவு செய்தனர்.ஏற்கனவே நடந்த கசப்பான சம்பவங்களால் தாசில்தார் தனுஷ்கோடி தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. டி.எஸ்.பி., சுகுமாறன், இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ், வி.ஏ.ஓ., ரேவதி, கிராமத்தினர் பங்கேற்றனர். திருவிழாவின்போது கண்காணிப்பு கேமரா வைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இருதரப்பினரும் சட்டம் - ஒழுங்கு பிரச்னையில் ஈடுபடக்கூடாது என போலீஸ் மற்றும் வருவாய் துறையினர் எச்சரித்தனர். இதனையடுத்து திருவிழா நடத்த அனுமதி வழங்கப்பட்டது.