திந்திரிணீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா: சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16நவ 2021 06:11
திண்டிவனம்: திந்திரிணீஸ்வரர் கோவிலில் நடந்த பிரதோஷ விழாவில்,மூலவர் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலில் இன்று மாலை நடந்த பிரதோஷ விழாவில் மூலவர் மற்றும் அவர் எதிரில் வீற்றிருக்கும் நந்தி பகவானுக்கும் பால், தயிர், இளநீர், பன்னீர், உள்ளிட்ட 11 அபிஷேக திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து உற்சவர் திந்திரிணீஸ்வரர் சமேதராக மரகதாம்பிகையுடன் நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டனர்.