300 ஆண்டு பழமையான கோவிலில் முதல்வர் ஸ்டாலின் ராசிக்குரிய மரக்கன்றை நடவு செய்த மந்திரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22நவ 2021 06:11
சென்னிமலை: சென்னிமலை அருகே, பழமை வாய்ந்த கோவிலில், முதல்வர் ஸ்டாலின் ராசிக்குரிய மரக்கன்றை, செய்தித்துறை அமைச்சர் நடவு செய்தார். ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே முருங்கத்தொழுவில், 300 ஆண்டுகள் பழமையான, பிரமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. கோவில் குளக்கரையில் மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது. செய்தி துறை அமைச்சர் சாமிநாதன், ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரமலிங்கேஸ்வரரை தரிசனம் செய்த இருவரும், முதல்வர் ஸ்டாலின் ராசியான சிம்ம ராசிக்குரிய பவளமல்லி மரக்கன்றை நடவு செய்தனர். இதையடுத்து அமைச்சர் சாமிநாதன் தனது ராசியான விருச்சிகம் ராசிக்குரிய தேக்கு மரக்கன்றையும், எம்.பி., கணேசமூர்த்தி தனது கும்ப ராசிக்கான, கடம்ப மரக்கன்றையும் நட்டனர்.