மதுரை : இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் கார்த்திகை முதல் சோம வாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் வழிபாடு நடைபெற்றது.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி டிஎஸ்கே மதுராந்தகி நாச்சியார் அவர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் கார்த்திகை முதல் சோம வாரத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமம் 1008 சங்காபிஷேகம் தலைமை அர்ச்சகர் தர்மராஜ்சிவம் தலைமையில் இன்று ( 22.11.2021) சிறப்பாக நடைபெற்றது. இதில் கண்காணிப்பாளர் கணபதி ராம் மற்றும் கோயில் ஊழியர்களும் பக்தர்களும் திரளாக கலந்து கொண்டனர்.