தஞ்சாவூர்: தமிழகமெங்கும் பெரு மழையால் மக்கள் மக்களின் அன்றாட வாழ்க்கை சீர்குலைந்துள்ளது. தஞ்சாவூர் பகுதிகளில் அதிக சேதம் இல்லாவிட்டாலும், எண்ணங்களின் சங்கமம் ( NDSO, Chennai ) என்ற பொதுநல அமைப்பின் நிதி உதவியுடன், அவர்களுடன் இணைந்து ரூபாய் 1,200/ மதிப்புள்ள மளிகைப் பொருட்களை நலிவுற்ற 50 கிராமிய கலைஞர்களுக்கு பெரு மழை நிவாரணப் பணி தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் சார்பில் நடைபெற்றது.