பழநி மலைக் கோயில் உண்டியலில் ரூ 2.36 கோடி காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23நவ 2021 09:11
பழநி: பழநி மலைக்கோயிலில் நேற்று (நவ.22) உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. செப் 16., முதல் நேற்று வரை கிடைத்த உண்டியல் காணிக்கையில் ஆயிரத்து 453 கிராம் தங்கமும், 14 ஆயிரத்து 995 கிராம் வெள்ளியும் கிடைத்தது. மேலும் ரூ.2 கோடியே 36 லட்சத்து 64 ஆயிரத்து 825 மற்றும் 150, வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணிக்கையில் இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார், கருர் துணை ஆணையர் நந்தகுமார் உட்பட கோயில், கல்லூரி அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இன்றும் உண்டியல் எண்ணிக்கை நடைபெற உள்ளது.