இன்றைய காலத்தில் பலரும் பிரச்னையில் சிக்கித் தவிக்கின்றனர். சிலர் அதை எளிதாக எதிர்கொள்கின்றனர். பலரோ அதை சந்திக்கமுடியாமல் கோபப்படுகின்றனர். ஒரு சமயம் கிரேக்கத் தத்துவ ஞானி சாக்ரடீஸ், நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது சாக்ரடீஸின் மனைவி அவரை அழைக்கவே, அவர் அதை கண்டுகொள்ளவில்லை. கோபப்பட்ட மனைவி, சாக்ரடீஸின் தலையில் தண்ணீரை ஊற்றினார். ஆனால் அவரோ, ‘‘இவ்வளவு நேரமாக வானத்தில் இடி இடித்தது. இப்போது மழை பெய்துவிட்டது’’ என்று அதை நகைச்சுவையாக மாற்றினார். பிரச்னையை எப்படி நகைச்சுவையாக மாற்றினார் என்பதை பார்த்தீர்களா. இதுபோல் நீங்களும் வாழ்க்கையை ரசித்து வாழுங்கள். எந்தவித பிரச்னையும் உங்களை பாதிக்காது.