பசியில்லாதபோது எதையாவது கொறித்து வயிற்றை நிரப்பி விடுகிறோம். அதேபோல் தேவையற்ற யோசனைகளால் மூளையை நிரப்பி விடுகிறோம். எதற்கெடுத்தாலும் யோசனை. ஒன்றை பற்றி யோசிக்கும்போது வேறு பல யோசனைகளும் மொய்க்கும். ஒன்றுமில்லாத விஷயத்தைக்கூட பெரிதாக பார்க்கிறோம். உடல் எடையைவிட யோசனைகளின் எடை அதிகமாகி கொண்டே செல்லும் அளவுக்கு யோசிக்கிறோம். அளவற்ற ஆசைகள் எந்த அளவு நம்மை பாதிக்குமோ, அதே அளவு தேவையற்ற எண்ணங்களும் நிம்மதியை கெடுக்கும். எனவே அனைத்தையும் பற்றி யோசிக்காதீர்கள்.