பதிவு செய்த நாள்
29
நவ
2021
04:11
மொடக்குறிச்சி: கொரோனா ஊரடங்கால், இரண்டு ஆண்டாக மொடக்குறிச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா தடை செய்யப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டு விழா, கடந்த, 16ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, 22ம் தேதி கம்பம் நடப்பட்டது. தினமும் பெண்கள் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் கிராமசாந்தி, நேற்று கொடியேற்றம் நடந்தது. நாளை மண்டப கட்டளை சாமி திருவீதியுலா, நாளை மறுநாள் மகந்தேர் இழுத்தல் மற்றும் மாவிளக்கு பூஜை நடக்கிறது. டிச.,1ம் தேதி ஊஞ்சல் மண்டபம், கட்டளை சாமி விடுதியில் தங்குதல், 2ம் தேதி விடுதியிலிருந்து ரதம் செல்லுதல் நிகழ்ச்சி, கோவில் தேரோட்டம் நடக்கவுள்ளது. 3ம் தேதி தெப்போற்சவம், ஊஞ்சல் பாட்டு நடக்கிறது. 4ம் தேதி மஞ்சள் நீராட்டுடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ராஜகோபால், தக்கார் அருள்குமார் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.