பதிவு செய்த நாள்
01
டிச
2021
12:12
சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், மாதம் 3,000 ரூபாய் உதவி தொகையுடன், ஓராண்டு சைவ சான்றிதழ் பயிற்சி நடத்தப்பட உள்ளது.சட்டசபை மானிய கோரிக்கையின் போது, 1.50 கோடி ரூபாய் மதிப்பில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் மேம்படுத்தப்படும் என, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். அதன்படி, மதுரை மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் கோவிலில், ஓராண்டு சைவ சான்றிதழ் வகுப்பு நடத்தப்பட உள்ளது. விண்ணப்பதாரர்கள் ஹிந்துக்களாக இருக்க வேண்டும். எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி நிலையத்தில் தங்கி படிக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு இலவச உணவு, சீருடை, தங்குமிடம், பயிற்சி காலத்தில் மாதம் ஒன்றுக்கு, 3,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். பயிற்சியில் சேர விரும்புவோர் விண்ணப்ப படிவங்களை, www.maduraimeenakshi.org என்ற கோவில் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஹிந்து சமய அறநிலையத் துறை அறிவித்து உள்ளது.