சேலம்: சேலம் அப்பா பைத்திய சுவாமி கோவிலில் கவர்னர் தமிழிசை சாமி தரிசனம் செய்தார்.புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சேலம் சூரமங்கத்தில் உள்ள அப்பா பைத்தியம் சுவாமியின் தீவிர பக்தர்.இந்நிலையில், சேலத்தில் நடைபெற்ற திருமண விழாவில் நேற்று பங்கேற்க சென்ற புதுச்சேரி கவர்னர் தமிழிசை, நிகழ்ச்சி முடிந்து, அப்பா பைத்தியம் சுவாமி கோயிலுக்கு சென்றார். அவரை கோவில் நிர்வாகிகள் வரவேற்றனர். தொடர்ந்து அப்பா பைத்தியம் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து, கவர்னருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர், சேலம் கோதண்டராமர் கோவிலுக்கு சென்று கவர்னர் வழிபட்டார்.