ராஜபாளையம்: இராஜபாளையம் சுற்றுவட்டார சிவன் கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி தேவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. ராஜபாளையம் மாயூரநாதசுவாமி கோயில், சொக்கர் கோயில், குருசாமி கோவில் பரவை அன்னம் காத்தருளிய சுவாமி கோயில், அருணாச்சலேஸ்வரர் கோயில், தெற்கு வெங்காநல்லூர் சிதம்பரேஸ்வரர், வாழ வந்தால் புறம் மன்மத ராஜா லிங்கேஸ்வரர், சோழபுரம் விக்கிரம பாண்டீஸ்வரர், தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய நாதன், சேத்துார் திருக்கண்ணீஸ்வரர் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.