Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ... திருநெல்வேலி வெங்கடாசலபதி கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவம் துவக்கம் திருநெல்வேலி வெங்கடாசலபதி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சி ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருச்சி ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்

பதிவு செய்த நாள்

24 செப்
2026
11:09

திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 26ம் ஆண்டாக பிரம்மோற்சவவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியதுடன், தினசரி ஸ்ரீநிவாச பெருமாள் பல்வேறுவாகனங்களில் எழுந்தருளி திருவீதிஉலாவரும் வைபவமும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றுவந்தது. இதனைத் தொடர்ந்து பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நேற்று காலை வெகுவிமர்சியாக நடைபெற்றது, இதையொட்டி காலை 9 மணியளவில் ஸ்ரீநிவாசபெருமாள் அலமேலு மங்கை சமதராக திருத்தேரில் எழுந்தருளினார்.


அதனைத் தொடர்ந்து, 9.40மணிக்கு கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் திரளான பக்தர்கள் பங்கேற்று திருத்தேரை வடம்பிடித்து இழுத்துச்சென்று வழிபட்டனர். தேரானது கோவில் வளாகத்தில்இருந்துபுறப்பட்டு 4 மாடவீதிகளிலும் வலம்வந்து பின்னர் நிலையை அடைந்தது. இதனை தொடர்ந்து பக்தர்கள் பக்தர்கள் சீனிவாச பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர், தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதமும் வழங்கப்பட்டது.  விழாவில் திருச்சிஸ்ரீ காளிதாஸ் குழுவினரின் நாதஸ்வர இசையும் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில்விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 5.72 சவரன் தங்கக் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவில் அருகில், துாப்புல் வேதாந்த தேசிகர் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டையில் வாழ்ந்த சட்டிச் சாமி சித்தர் கோயில் உள்ளது. நேற்று சட்டிச் சாமி சித்தரின் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மேற்கு, தெற்கு வாசல்களை மட்டுமே இருவழிப் பாதையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar