சட்டிச்சாமி சித்தர் கோயில் குருபூஜை; சிறப்பு அபிஷேகம், ஹோமம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24செப் 2026 10:09
தேவகோட்டை: தேவகோட்டையில் வாழ்ந்த சட்டிச் சாமி சித்தர் கோயில் உள்ளது. நேற்று சட்டிச் சாமி சித்தரின் குருபூஜையை முன்னிட்டு காலையில் சிறப்பு ஹோமம் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விநாயகர், முருக பெருமான் , சிவபெருமானாக வீற்றிருக்கும் சட்டிச் சாமி சித்தருக்கு வெள்ளி அலங்காரம் விசேஷ பூஜைகள் நடந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு விருந்து வழங்கினர். மாலையில் ஆன்மிக இலக்கிய பேச்சாளர் பேராசிரியர் சொ.சொ.மீ. சுந்தரம் சித்தர்கள் வரலாறு பற்றி பேசினார். பாண்டிச்சேரி சம்பந்தம் குருக்கள் திருமுறை இன்னிசை பாடல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.